இந்திய இராணுவ வீரர்களை மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்த சீன இராணுவம்...!
திங்கட் கிழமை மற்றும் செய்வாய் ஆகிய திகதிகளில், இந்திய சீன எல்லையில் எந்த ஒரு துப்பாக்கி சத்தமும் கேட்க்கவில்லை என்று உறுதிசெய்யப்படுள்ளது. போர் நடக்கவில்லை. ஆனால் எப்படி 20 இந்திய ராணுவம் இறந்தது என்று கேட்டால். கை கலப்பு சண்டையில் தான் என்ற விடையம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர், இந்திய ராணுவத்தினர் லடாக் பகுதியில், சிக்கிக் கொண்ட சீன ராணு வீரர்களை கைகளால் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.....
இதற்கு பழி வாங்கும் படலமே தற்போது நிகழ்ந்துள்ளது. 20க்கும் அதிகமான இந்திய ராணுவத்தை சுற்றிவளைத்த சீன ராணுவத்தினர். அவர்களோடு சண்டையிட்டு அவர்களை பிடித்து கட்டி வைத்து, மூங்கில் தடியால் அடித்தே கொன்றுள்ளதாக, தகவல்கள் கசிந்துள்ளது. இதேவேளை இதனை அறிந்த இந்திய ராணுவத்தினர் குறித்த பகுதிக்கு மேலதிகமாகச் சென்று. 39 சீன ராணுவத்தினரை தாக்கியுள்ளார்கள்....
இதுவும் பெரும் கை கலப்பு என்றே கூறப்படுகிறது. இதில் தான் சீன ராணுவம் பலத்த இழப்பை சந்தித்துள்ளது. சீனா ராணுவத்தினர் ஊடுருவி வந்து தான் முதல் தாக்குதலை நடத்தியிருந்தார்கள் என்றும். பின்னர் அவர்களால் தமது பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை தோன்றியதால், அனைவரும் உயிரிழந்ததாகவும் மேலும் அறியப்படுகிறது.
லடாக் என்னும் மலைப் பகுதியில் ஒரு கை துப்பாக்கியல் சுட்டால் கூட பலமாக எதிரொலிக்கும். இதனால் இவர்கள் துப்பாக்கி எதுவும் பாவிக்கவில்லை. சைலண்டாக வேலையை முடிக்க முனைந்துள்ளார்கள்....

No comments:
Post a Comment