பிரான்ஸில் பலவீனமான மக்கள் மற்றும் சிறுவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
இன்று Île-de-Franceக்குள் சுற்றுச் சூழல் மாசடைவு எல்லையை கடப்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் காற்றின் மாசு நிலை தூய்மடைந்திருந்த நிலையில், நாட்டில் தற்போது பொது முடக்க தளர்வினால், மக்கள் தங்களுடைய அன்றாட வேலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை ஜூன் 25 ஆம் திகதி Île-de-Franceல் வெப்பநிலை 35 டிகிரி C இனை தொடுகிறது.
இதனால் இன்று அண்ணளவாக 180 மைக்ரோ கிராம்ஸ் / m3 அளவில் மாசடைவு பதிவாக உள்ளதாக Airparif நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அளவு 170 மைக்ரோகிராமில் இருந்து 200 கிராம் வரை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், பலவீனமான மக்கள், சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதால் அவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளனர்
கொரோனா வைரஸ் காரணமாக மிக தூய்மையடைந்திருந்த இந்த சுற்றுச் சூழல் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதாக Airparif கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment