கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம்.....!!!
நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகுசேவைகள் இன்றிலிருந்து வழமைக்குத்
திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி அறிவித்துள்ளார்.
நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் வழமைபோன்று இடம்பெறும்.
வட.தாரகை காலை 8 மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு புறப்பட்டு
மாலை 4 மணிக்கு மீண்டும் குறிகாட்டுவானை வந்தடையும் என தெரிவித்த பிரதேச
செயலாளர், ஏனைய படகு சேவைகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.
மேலும் கொரனோ தொற்று காரணமாக சமூக இடைவெளியை பேணியே பொதுமக்கள் படகுகளில்
பயணிக்க வேண்டியுள்ளதன் காரணமாக மேலதிக படகு சேவைகள் மேற்கொள்ள
வேண்டியுள்ளதாக சத்தியசோதி சுட்டிக்காட்டினார். தற்போது நெடுந்தீவு
பகுதிக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக மேலதிக படகுசேவை
நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும்
தெரிவித்தார்.
குமுதினி, வட தாரகை போன்றவை வழமை போன்று தமது சேவையில் ஈடுபடும் எனவும்
சமூக இடைவெளி பேணப்படுவதன் காரணமாக மேலதிக படகு சேவையும்
இடம்பெறவுள்ளதாகவும் சத்தியசோதி மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம்.....!!!
Reviewed by Author
on
June 01, 2020
Rating:

No comments:
Post a Comment