பழிவாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவே அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட்டது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ!
வாரியபொல பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பிரதமர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ஜனாதிபதி பிரதிநித்துவப்படுத்தும்
கட்சியினால் அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும். அரசியல் அமைப்பு மாற்றப்பட
வேண்டியது அவசியம். புழிவாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவே அரசியல்
அமைப்பு கொண்டுவரப்பட்டது....
அதனை தயாரித்தவர்கள் இன்று அதை மாற்றுமாறு
கூறுகின்றனர். ஆகவே பலமிக்கதொரு அரசாங்கம் அமைய உங்களுக்குள்ள பொறுப்பை
நிறைவேற்றுங்கள்.
அதேபோல் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருணாகல் பிரச்சார அலுவலகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்...
மேலும் குருணாகல் பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் மாநாடும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.
பழிவாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவே அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட்டது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ!
Reviewed by Author
on
June 22, 2020
Rating:

No comments:
Post a Comment