மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்பு: மூவர் மாயம்:தேடும் பணி தீவிரம்......
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
காணமல் போன மூன்று மீனவர் குறித்து எந்த வித தகவலும் கிடைக்காததால் தென் கடலோர மீனவக்கிராமங்களில் சோகத்தை ஏற்பட்டுதியுள்ளது.
கொரோனா
மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு பின் கடந்த சனிக்கிழமை
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 622 விசைப்படகுகளில் மீனவர்கள்
மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹெட்ரோ என்பவருக்கு
சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர்,மலர்,ஆனந்த்,ஜேசு ஆகிய நான்கு
மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
வழக்காமாக மீனவர்கள் ஞாயிற்றுகிழமை காலை மீன் பிடித்து விட்டு கரை திரும்பி இருக்க வேண்டும்.
ஆனால்
மூன்று நாட்களுக்கு மேலாக கரை திரும்பாததால் விசைப்படகிள் உரிமையாளர்
மீன் வளத்தறை அதிகாரிகளிடம் படகு மீனவர்களுடன் மாயமானது குறித்து தகவல்
தெரிவித்ததுடன் படகையும் மீனவர்கள்; நால்வரையும் மீட்டு தரும்படி மனு
அளித்தனர்.
இதனையடுத்து
நேற்று திங்கட்கிழமை காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து
இரண்டு படகுகளில் பத்து பேர் மாயமான மீனவர்களை தேடி கடலுக்குள் சென்றனர்.
ஆனால்,
மாயமான மீனவர் மற்றும் விசைப்படகுகள் குறித்த தகவல் ஏதும் கிடைக்காதால்
மீனவர்னகளின் உறவினாகள் மீனவர்களை தேடும் பணியினை துரிதபடுத்த வேண்டும் என
கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில்,
இன்று செவ்வாய்க்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தை
சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பி
கொண்டிருந்த போது நடுக்கடலில் மூன்று நாட்களுக்கு முன் மாயமான விசைப்படகு
மூழ்கியதில் உயிருக்க போராடிய நிலையில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஜேசு
என்ற மீனவரை மீட்ட கோட்டை பட்டிணம் மீனவர்கள் சிகிச்சைக்காக மணல் மேல்குடி
அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும்
இவருடன் மீன் பிடிக்க சென்று மாயமான மூன்று மீனவர்களை தேடும் பணியில்
இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் இந்திய கடற்படைக்கு
சொந்தமான உலங்கு வானுர்தி மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறமை
குறிப்பிடத்தக்கது...
மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்பு: மூவர் மாயம்:தேடும் பணி தீவிரம்......
Reviewed by Author
on
June 16, 2020
Rating:

No comments:
Post a Comment