தேசிய காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இந்த பொதுத்தேர்தல் இடியப்ப சிக்கலாக மாறியிருக்கிறது.....
நேற்று (15) இரவு நடைபெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர்,
அம்பாறையில் போட்டியிடும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களின் கட்சி சக வேட்பாளர்களையே தோற்கடிக்கும் வேலைகளிலும், விருப்புவாக்கு சண்டைகளிலும் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒருவரின் குறைகளை மற்றவர் வெளிச்சம் போட்டு கொண்டு வருகிறார். இதனால் சமூகம் பாரிய தாக்கத்தை சந்திக்கும் அபாயம் உண்டு.
கடந்த பாராளுமன்ற காலங்களில் மக்களுக்கு எதுவித சேவைகளும் செய்யாமல், சமுகத்தினை நோக்கி பிரச்சினைகள் வந்தால் அது தொடர்பில் பேசாமல் இருந்து விட்டு இப்போது பல பித்தலாட்ட கதைகளை மக்கள் மத்தியில் பேசி வருகிறார்கள். இந்த நாடகம் எம் மத்தியில் எடுபடாது. இவர்களுக்கு நாங்கள் பாடம் கற்று கொடுக்க வேண்டும். எமது மக்களின் வாழ்க்கை முறையை பயன்படுத்தி அவர்கள் எங்களை முட்டாள்களாக்க எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
இப்போதைய சூழ்நிலையில்
யானை இரண்டாக பிளந்து இருக்கிறது, மு.காவுக்குள் தலைமைத்துவ போட்டி
தோன்றியுள்ளது. மக்கள் காங்கிரசில் செயலாளர் பிரச்சினை பெரிய பிரச்சினையாக
உருவெடுத்துள்ளது. சஜித் அணி வேட்பாளர்கள் போட்டியிலிருந்து
விலகிக்கொள்கிறார்கள் இப்படி இந்த பொதுத்தேர்தல் இடியப்ப சிக்கலாக
மாறியிருக்கிறது என்றார். இந்நிகழ்வில் தேசிய காங்கிரஷின் முக்கியஸ்தர்கள்,
கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இந்த பொதுத்தேர்தல் இடியப்ப சிக்கலாக மாறியிருக்கிறது.....
Reviewed by Author
on
June 16, 2020
Rating:

No comments:
Post a Comment