ஜனாதிபதியஜன் தொல்லியல் ஆய்வை நிராகரிக்கும் திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் ...
இந்த செயலணியில் இடம்பெற்றுள்ள ஒரு சில உறுப்பினர்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த அமைப்பு அதிருப்தி வௌியிட்டுள்ளது.
இத்தகைய செயற்பாடுகள் இலங்கையின் ஒற்றைக் கலாசாரத்தை மாத்திரமே ஊக்குவிக்கும் எனவும் திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் ஆரம்பப் புள்ளியான இணைந்த வடக்கு கிழக்கும் தமிழர்களின் பூர்வீகத் தொன்மையும் மிக முக்கிய அலகுகளாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் மக்களின் பாரம்பரிய இருப்பை சிதைக்கும் வகையில், பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை பொது அமைப்புகளின் ஒன்றியம் விசனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment