அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வரலாற்றில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் - மங்கள சமரவீர...

ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை, இலங்கையின் எதிர்கால சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான ஒரு முன்னுதாரணமாகும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“ கடந்த 70 வருட இலங்கை வரலாற்றில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும்........

மத்திய வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி இழிவான முறையில் பகிரங்கமாக அவமானப்படுத்தியது, அவர்களை கொடுமைப்படுத்துவதற்கு ஒப்பான செயலாகும்.மேலும் அரச அதிகாரிகளுடன் சேவை அடிப்படையில் திருப்தியின்மை இருப்பின் அதனை தனிப்பட்ட ரீதியில் விளங்கப்படுத்த முடியும். குறிப்பாக அவர்களுக்கு மரியாதை வழங்கப்படுவது அவசியம்.

இது இலங்கையின் எதிர்காலமான சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது...

அந்தவகையில் பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இதனை பற்றி கண்டுகொள்ளவில்லை என்பதால் மத்திய வங்கி அதிகாரிகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது எங்களது கடமை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை வரலாற்றில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் - மங்கள சமரவீர... Reviewed by Author on June 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.