பாதுகாப்புத்துறைக்கு அவசரகால நிதியாக 500 கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு .........
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை தொடர்ந்து பாதுகாப்புத்துறைக்கு அவசரகால நிதியாக 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புப் படையினரின் ஆயுத அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் வெடிமருந்துகளையும், ஆயுதங்களையும் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்காக மேற்படி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது...
குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ பொருட்களை வாங்குவதற்கும் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது தற்செயலுக்கும் அவர்களின் செயல்பாட்டுத் தயாரிப்பை அதிகரிப்பதற்கும் பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் கிழக்கு எல்லைப் பகுதியின் இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் ஊடுருவியதால் இரு நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில் அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் திகதி இந்திய-சீன படைகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டன.
இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றமை மிக குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment