வடக்கில் ஏற்பட்டள்ள மஞ்சளின் தட்டுப்பாடு....
வட மாகாணத்தில் பாரிய விலையில் மஞ்சள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு பாரிய
தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும் இன்னமும் வடக்கிற்கு மஞ்சள் கிடைப்பதில்லை
என கூறப்படுகின்றது.
அரசாங்கத்தினால் மஞ்சள் விற்பனை செய்வதற்கு நிர்ணய விலை
தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் 4000 ரூபாவிற்கும் மஞ்சள்
கொள்வனவு செய்ய முடியவில்லை என வடக்கு நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.வட
மாகாணத்தில் உணவுக்கு மாத்திரமின்றி ஆலய செயற்பாடுகள், வர்த்தக நிலையங்கள்,
வீடுகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு மஞ்சள் பயன்படுத்துகின்றனர்.மஞ்சள்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கடை உரிமையாளர்
சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது...
வடக்கில் ஏற்பட்டள்ள மஞ்சளின் தட்டுப்பாடு....
Reviewed by Author
on
June 26, 2020
Rating:

No comments:
Post a Comment