கொரோனா வைரஸ் தொற்றால் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். ...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று (ஜூன் 10) காலமானார்.
தனது பிறந்த நாளான ஜூன் 10-ஆம் தேதியில் அவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்தில், திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது, விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
மே 2ஆம் தேதி, காய்ச்சல் இருப்பதாக தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது கொரோனா சோதனை செய்ததில், அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
Reviewed by Author
on
June 10, 2020
Rating:


No comments:
Post a Comment