புலிகளை யுத்தத்தில் வெற்றிகொள்வதற்கு அவரை ஒரு உபாய முறையாக மாத்திரமே பயன்படுத்தினோம்..-ரணில் விக்ரமசிங்க
மூவாயிரம் படையினரைக் கொன்று குவித்ததாக கருணா அம்மான் கூறிய கருத்தானது அரசை பாதுகாக்கவே என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர், ரணிலை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கருணா தொடர்பாக ரணில் மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தக்காலத்தில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து அவரை பிரித்தெடுத்தோம்.
அதாவது புலிகளை யுத்தத்தில் வெற்றிகொள்வதற்கு அவரை ஒரு உபாய முறையாக மாத்திரமே பயன்படுத்தினோம்.
இதற்காக அவருக்கு அமைச்சு பதவியோ அல்லது வேறு எந்ததொரு பதவியையும் வழங்கவில்லை.
இதேவேளை தற்போது, கருணா அம்மான், ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக தெரிவித்துள்ளமையானது அரசை காப்பாற்றுவதற்கே ஆகும்” என ரணில் குறிப்பிட்டுள்ளார்...
Reviewed by Author
on
June 26, 2020
Rating:


No comments:
Post a Comment