கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை......
காலி முதல் கொழும்பு மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை காற்றின்
வேகம் அதிகரித்துக் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரை ஆழமான
மற்றும் ஆழமற்ற கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு
50-60 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்துக் காணப்படும் என்பதோடு,
கடற்பிரதேசம் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, நாட்டைச் சூழவுள்ள சில கடற்பிரதேசங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்படையினரும், கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளோரும் மிகுந்த
அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம்
கேட்டுக்கொண்டுள்ளது.
கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை......
Reviewed by Author
on
June 08, 2020
Rating:

No comments:
Post a Comment