மன்னாரில் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்படும் மன்னார் எருக்கலம்பிட்டி கிராம மக்கள்.
மன்னாரில் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக மன்னார் எருக்கலம்பிட்டி கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆதற்கு அமைவாக இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒன்றை எருக்கலம்பிட்டி கிராமமக்கள் இணைந்து முன்னெடுத்தனர்.
குறித்த பேரணி மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 5ஆம் கட்டை சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பேரணி எருக்கலம் பிட்டி கிராமப் பகுதியூடாக மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஊர்வலமாகச் சென்றது.
-கடந்த 26ஆம் தகதி தொடக்கம் எதிர் வரும் 2ஆம் திகதி வரை போதைவஸ்து ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
எருக்கலம்பிட்டி கிராமத்தில் போதைவஸ்து தொடர்பில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த கிராம மக்கள் பள்ளி பரிபாலன சபை,கிராம அபிவிருத்திச் சங்கங்கள் உற்பட கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்கள்,கிராம மக்கள் ஆகியோரை இணைந்து போதை ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து குறித்த கிராமத்தில் போதை ஒழிப்பு மற்றும் பாவனையை முற்றாக ஒழித்து போதை வஸ்து அற்ற கிராமமாக மாற்றும் நோக்கில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அதற்கமைவாக குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்படும் மன்னார் எருக்கலம்பிட்டி கிராம மக்கள்.
Reviewed by Author
on
June 28, 2020
Rating:

No comments:
Post a Comment