வாகன சில்லுக்குள் அகப்பட்டு சிறுவன் பலி...
நேற்று (03) மாலை குளம் ஒன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு குறித்த சிறுவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை சிறுவனான மோ. ஜதுர்சன் (வயது 10) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவ்வாறு உயிரிழந்த மாணவன் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 வகுப்பில் கல்வி பயின்று வந்ததுடன் எதிர்வரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதுவதற்கு தயாராகவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விபத்து சம்பவம் தொடர்பான விசாரணையினை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இம் மாணவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது...
வாகன சில்லுக்குள் அகப்பட்டு சிறுவன் பலி...
Reviewed by Author
on
July 04, 2020
Rating:

No comments:
Post a Comment