ஜனாதிபதி ட்ரம்புக்கும் பிரதமா் மோடிக்கும் இடையிலான நம்பமுடியாத நட்புறவைக் கண்டு இந்த உலகம் வியக்கிறது....
இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 244ஆவது சுதந்திரதினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதனையொட்டி தனது ருவிட்டர் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அந்த பதிவில், அமெரிக்காவின் 244ஆவது சுதந்திர தினத்தில் அந்நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதி ட்ரம்புக்கும் வாழ்த்துகள் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டிருந்தார்...
இந்நிலையில், பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த அதிபா் ட்ரம்ப், வாழ்த்துக்கு நன்றி நண்பரே. அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது என்று தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரு நாட்டு தலைவா்களின் இந்த கலந்துரையாடல் சமூக ஊடகங்களில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து இந்திய-அமெரிக்க நிதிக் குழு நிர்வாகி அல் மாசன் கூறுகையில், ‘ஜனாதிபதி ட்ரம்புக்கும் பிரதமா் நரேந்திர மோடிக்கும் இடையிலான நம்பமுடியாத நட்புறவைக் கண்டு இந்த உலகம் வியக்கிறது’ என்று கூறியுள்ளார்...

No comments:
Post a Comment