மன்னாரில் அரசியல் கட்சி ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கியமை தொடர்பில்விசாரணைகள்..
மன்னாரில் அரசியல் கட்சி ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து பணமும்
பரிசுப் பொருட்களும் வழங்கியமை தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று
வருவதாக மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார்
மாவட்டத்தில் அரசியல் கட்சி ஒன்று கடந்த 17ஆம் திகதி முன் பள்ளி
ஆசிரியர்களை அழைத்து தங்களது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டமை மற்றும்
ஆசிரியர்களுக்கு 2ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு புடவையும் வழங்கியுள்ளதாக
மன்னார் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
எமது
முறைப்பாட்டுக் குழு அதிகாரிகள் மற்றும் பொலிசார் இது தொடர்பான
விசாரணைகளை மேற்கொண்டிருந்ததில் கல்வி அதிகாரி ஒருவர்
சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலதிகமான விசாரணைகள் நடை பெற்று வருகிறது என மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் அரசியல் கட்சி ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கியமை தொடர்பில்விசாரணைகள்..
Reviewed by Author
on
July 21, 2020
Rating:

No comments:
Post a Comment