மன்னாரிற்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திடீர் விஜயம்..........
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் திங்கட்கிழமை(13) காலை மன்னாரிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்தார்.
-வருகை
தந்த தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல்
அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றனுடன்
கலந்துரையாடினார்.
-இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் மற்றும் உரிய அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
-அதனைத்தொடர்ந்து
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மன்னார் மாதர் அபிவிருத்தி
ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான வாக்கு வீத அதிகரிப்பை ஊக்கு
விக்கும் வகையில் இடம் பெற்ற வீதி நாடகத்தில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த
தேசப்பிரிய கலந்து கொண்டிருந்தார்.
மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் காலை 10.15 மணியளவில் குறித்த வீதி நாடம் இடம் பெற்றது.
அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக குறித்த வீதி நாடகம் இடம் பெற்றது.
இதன் போது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட குழுவினர் குறித்த விழிர்ப்புனர்வு வீதி நாடகத்தை பார்வையிட்டனர்.
மன்னாரிற்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திடீர் விஜயம்..........
Reviewed by Author
on
July 13, 2020
Rating:

No comments:
Post a Comment