மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க் கடன் நிறைவேற்றல்..
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில்
இன்றைய தினம் திங்கட்கிழமை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க் கடன்
நிறைவேற்றும் நிகழ்வு இடம் பெற்றது.
பிராமணர்கள் இடத்து இறந்த பிதிர்களின் ஆன்ம ஈடேற்றம் வேண்டி மக்கள் பிதிர் கடன்களை நிறை வேற்றியுள்ளனர்.
அத்தோடு
வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நெய் விளக்குகளை ஏற்றி
பெருமானுக்கு மோட்ச விளக்குகளை ஏற்றி பக்தர்கள் நிறைவேற்றினர்.
அத்தோடு இறந்தவர்களின் ஆன்மா கிடைத்ததற்காக அடியவர்கள் கடமைகளை நிறைவேற்றியதை காணக்கூடியதாக இருந்தது
சுகாதார நடைமுறைகளை பின் பற்றி மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்தோடு ஆன்ம ஈடேற்றம் வேண்டி திருக்கேதீஸ்வர பாலாவி தீர்த்தத்தில் நீராடி பிதிர் கடன்களை மக்கள் நிறைவேற்றினர்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க் கடன் நிறைவேற்றல்..
Reviewed by Author
on
July 20, 2020
Rating:

No comments:
Post a Comment