யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந்தேக நபரின் மலவாசலில் ஹெரோயின் போதைப்பொருள்...!!!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மலவாசலில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று(புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சந்தேக நபர் யாழ்ப்பாணம் மறியல்சாலையில் நேற்றிரவு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 300 மில்லிக்கிராம் ஹெரோயின் பக்கட்டுக்கள் நான்கு அவரது மல வாசலில் இருந்து மீட்கப்பட்டது.
இதனையடுத்து சந்தேக நபர் மயக்கமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Reviewed by Author
on
July 02, 2020
Rating:


No comments:
Post a Comment