யானை தாக்கி இளம் விரிவுரையாளர் மரணம்......
நேற்று இரவு தாக்குதலுக்கு உள்ளான அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த விரிவுரையாளர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபிரிவு விரிவுரையாளரான கொழும்பு களனிய பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தாக்குதலிற்குள்ளானவரும்
மற்றுமொருவரும் வணக்க ஸ்தலத்திற்கு சென்று திரும்புகையிலேயே யானை குறித்த
இருவரையும் துரத்தியுள்ளது. இதன்போது இருவரும் வெவ்வேறு திசையில் தப்பி ஓடியுள்ளதுடன் யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.......
யானை தாக்கி இளம் விரிவுரையாளர் மரணம்......
Reviewed by Author
on
July 20, 2020
Rating:

No comments:
Post a Comment