அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலையில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை , வாள்வெட்டு,கொலையில் முடிந்திருக்கிறது.

 மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான  வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை)  இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

செங்கலடி பாடசாலையொன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும், செங்கலடியை சேர்ந்த மாணவனுக்கு, அதே பாடசாலையில் கற்கும் கொம்மாதுறையை சேர்ந்த மாணவன் தாக்கியதால் காயமடைந்த நிலையில் செங்கலடியை சேர்ந்த மாணவன், வீடு சென்று நடந்த விடயத்தை கூறியதும்,
காயமடைந்த மாணவனின் உறவினர்கள் இருவர் இம் மாணவனை அழைத்துக் கொண்டு இரவு (22/08) 08.30 மணியளவில் கொம்மாதுறைக்கு சென்று, ஏன் ? இவனை தாக்கினீர்கள் என விடயத்தை கேட்டுக்கொண்டிருந்த போது ஏற்ட்ட கருத்துமுறன்பாட்டினால் கொம்மாதுறையை சேர்ந்த சம்பந்தப்பட்டவர்களால், இவர்கள் தாக்கப்பட்டு, வாள் வெட்டுக்கும் உள்ளாகியுள்ளனர்.
பாரிய வாள் வெட்டுக்குள்ளான செங்கலடியை சேர்ந்த மாணவன் ரமணன் திவ்வியநாதன் (14) சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததோடு,
இம் மாணவனின் உறவினர்களான சசிகுமார் மற்றும் பிரேமநாதன் ஆகிய இருவரும் பாரிய வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவத்தை அறிந்த ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று விசாரனைகளை மேற்கொண்டு, மாணவனின் சடலத்தை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும், காயங்களுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்திருக்கிறார்கள்.
கொலைக்கு காரணமானவர்கள் தப்பிச்சென்றுள்ள போதும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக வாள், ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வத்தோடு பங்குபற்றுபவர் என்றும் சிறந்த பணிவான குணாம்சங்கள் கொண்டவர் என்றும் விளையாட்டுப் பயிற்சி உத்தியோகத்தர் லோகிதராசா ஜயஜனனி தெரிவித்தார்.

மேலும் செங்கடி மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து இந்த மாணவன் பங்குபற்றிய கூடைப்பந்தாட்ட அணி, முதற் தடவையாக கல்குடா வலய மட்ட அரை இறுதிப்போட்டி வரை சென்றது எனவும் ஜயஜனனி தெரிவித்தார்.

இதேவேளை சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



பாடசாலையில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை , வாள்வெட்டு,கொலையில் முடிந்திருக்கிறது. Reviewed by Author on August 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.