வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 19 பேர் மற்றும் 63 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கடும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, இந்த அனத்தத்தில் சிக்கி 63 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக மாநிலத்தின் தெற்கு, வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த முதலாம் திகதி முதல் தற்போது வரை மழை வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 810 பேர் 104 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 500 வீடுகள் சேதம் அடைந்த நிலையில் 216 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
அதேவேளை, 60 ஆயிரம் ஏக்கர் பயிர்களும் 50 ஆயிரம் ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment