முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான றிஸாட் பதியுதீன் தாரபுரம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான றிஸாட் பதியுதீன் இன்று காலை
11.45 மணியளவில் மன்னார் தாரபுரம் அல்மினா மகா வித்தியாலய வாக்களிப்பு
நிலையத்தில் வாக்களித்தார்.
அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,,,
-மக்கள்
சஜீத் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள் என
நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.வன்னி மாவட்டத்திற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை
மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
-நாட்டில் உள்ள மக்கள் இந்த நாட்டில் நல்லாட்சியை கொண்டு வருவதற்காக வாக்களிப்பார்கள்.
-மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் சுமூகமாக வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றது.
-அரசாங்கம்
மக்களுக்கு பல்வேறு தடங்களை ஏற்படுத்தியுள்ளனர்.எனினும் மக்கள்
வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக
உள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்..
முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான றிஸாட் பதியுதீன் தாரபுரம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
Reviewed by Author
on
August 05, 2020
Rating:

No comments:
Post a Comment