வவுனியாவில் தனது வாக்கை பதிவு செய்தார் சிவசக்தி ஆனந்தன்..
நாட்டில் 9ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றன.
வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை அளித்தார்.
வாக்களிப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அதன் மூலம் உறுதிமிக்க அரசியல் தலைமைத்துவம் ஒன்று வரும் என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் தனது வாக்கை பதிவு செய்தார் சிவசக்தி ஆனந்தன்..
Reviewed by Author
on
August 05, 2020
Rating:

No comments:
Post a Comment