ஜேர்மனியில் புதிய சட்டம் - நாய்களைத் தினமும் இரு முறை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்...
செல்லப்பிராணியாக நாய் வளர்ப்போர் தங்கள் நாய்களைத் தினமும் இரு முறை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஜேர்மனியில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு இருமுறை என மொத்தம் 1 மணி நேரம் நாய்களை உடற்பயிற்சிக்காக வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் என்று புதிய சட்டம் குறிப்பிட்டுள்ளது.
நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னரே அந்தச் சட்டத்தை அறிமுகம் செய்ததாக ஜேர்மானிய வேளாண்மைத்துறை அமைச்சர் கூறினார்.“செல்லப் பிராணிகள் மனிதர்கள் அணைத்துக்கொள்ளும் விளையாட்டுப் பொருள்கள்
அல்ல. அவற்றின் தேவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
நாய்களுக்குப் போதுமான உடற்பயிற்சி தேவை, அவற்றை அதிக நேரம் தனிமையில் விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்...

No comments:
Post a Comment