அமரர் தெய்வத்திரு கலாநிதி சபா.மனோகரக் குருக்கள். அவர்களின் 69 வது ஜனன தின நிகழ்வு நேற்று நடைபெற்றது
06.09.2020 அன்று ஞாயிறு மாலை 02 15 மனிக்கு கலாநிதி மனோகரக் குருக்கள் ஐயாவின் 69 வது ஜனன தின நிகழ்வு நடைபெற உள்ளது முதல் நிகழ்வாக பொலிஷ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மனோகரக் குருக்கள் ஐயா அவர்களது உருவச்சிலைக்கு அகவனக்கம் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் தொடர்ந்து எழுத்தூரில் அமைந்துள்ள எமது அலுவலகத்தில் வைத்து உறுதி வழங்கும் நிகழ்வு மாலை 03 00 மனிக்கு நடைபெற்றது.
ஆகம நட்சத்திரம் கலாநிதி மனோகர் குருக்கள் ஐயா அவர்கள் தொடர்பான சிறப்புக்கட்டுரை
அருள்நெறியாகிய சைவ நெறி அறிவு நெறியாகிய வைதீக நெறியுடன் ஒன்றிணைந்து வைதீக சைவம் என்னும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது . சைவ நெறி வளர்ச்சி அடைவதற்கு உரிய பணிகள் சைவப் பிரசங்கங்கள் செய்தல் தமிழ் சமஸ்கிருதம் என்னும் இரு மொழிகளிலும் உள்ள பழைய நூல்களை அழிந்துவிடாமல் பாதுகாத்தல் புதிய நூல்ககை வெளியிடல்
என பலவகை பட்டன
மனோகர குருக்கள் அவர்கள் சைவப் பிரசங்கங்கள் செய்தல் பழைய நூல்களை பாதுகாத்தல் புதிய நூல்களை உருவாக்க உதவி செய்தல் முதலிய மேலான சிவ புண்ணிய செயல்களிலும் தன்னால் இயன்ற திருப்பணிகள் ஆகிய தீர்த்தக் கிணறு வசந்தமண்டபம் ஓவிய வேலைப்பாடு பரிவார ஆலயங்கள் போன்றவற்றை வசதி குறைந்த ஆலயங்களுக்கு அமைத்தும் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை காகவும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வந்ததோடு முப்போதும் திருமேனி தீண்டுவார் பெருமையும் ஆகம கிரியைகளில் தமது காலம் முழுவதையும் பயன்படுத்தி தூய வாழ்க்கை நடத்தி வந்த பெரியவர்
கலாநிதி மனோகர் குருக்கள் ஐயா அவர்கள் கிரியை கருமங்களை முற்றும் உணர்ந்து மந்திரம் கிரியை பாவனை மூன்று சேரத் தரிசிப்போரை பரவசமடையச் செய்பவர் கோவில் கிரிகைகளோடு மட்டும் அல்லாது சைவஸ்மார்த்த கிரியைகளையும் செய்து வைப்பதில் ஈடு இணையற்றவர் கிரியைகளை நிகழ்த்தும் பொழுது உடல் பொருள் ஆவி நேரம் உணவு என்பவற்றை கூட பொருட்படுத்தாது உரிய நியதிப்படி கிரியைகளை நிகழ்த்தி வைப்பவர்
ஐயா அவர்கள் ஒரு மதவாத சிந்தனையற்றவர் எல்லா சமயங்களையும் மதிக்கின்ற தன்மையும் அவர்களுக்கு கௌரவம் அளிக்கின்ற தன்மையும் அவர்களை அரவனைக்கும் தன்மையும் இவரிடம் காணப்பட்டது. பிற சமயத்தவர்கள் இவரை தங்களது சமய விழாக்களுக்கு அழைத்து இவரது பிரசங்கத்தினை கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள். இவர் சமய சமூக நல்லிணக்கத்திற்காக பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியவர். இவரது சிரித்த முகத்தை கண்ட எதிரிகள் கூட தலை சாய்த்து விட்டு தான் செல்வார்கள்.
தெய்வத்திரு கலாநிதி மனோகர் குருக்களின் 69 ஆவது அகவை தினத்தில் அவரது பரிபூரண குருவருள் ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைக்க பிராத்திக்கின்றோம்

No comments:
Post a Comment