வவுனியாவில் புதையல் தோண்டிய 8 பேர் கைது
வவுனியா - பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபாநகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) காலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் 8 பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் மண்வெட்டி உட்பட சில பொருட்களையும், இரண்டு சொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதாக தெரிவித்த பொலிஸார், அவர்கள் அனைவரும் நாளையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் புதையல் தோண்டிய 8 பேர் கைது
Reviewed by Author
on
September 06, 2020
Rating:

No comments:
Post a Comment