ஒரு தலைக்காதல் தோல்வியின் காரணமாக இளைஞன் தற்கொலை
ஒரு தலைக்காதல் தோல்வியின் காரணமாக இளைஞர் ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.
மாதகல் நாவலடி பகுதியில் இன்று இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு விபரீத முடிவு எடுத்துத் தற்கொலை செய்துள்ளார்.
அதே இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலைக் காதலாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணிடம் தனது காதலை தெரிவித்த போது, அந்தப் பெண் இவரது காதலை ஏற்க மறுத்ததன் காரணமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.
தற்கொலை சம்பவம் தொடர்பாக இளவாளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு தலைக்காதல் தோல்வியின் காரணமாக இளைஞன் தற்கொலை
Reviewed by Author
on
September 06, 2020
Rating:

No comments:
Post a Comment