மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் முச்சக்கர வண்டி உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து!
மட்டக்களப்பு- கரடியனாறு, புல்லுமலை வீதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடியனாறு புல்லுமலை வீதியில் மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரமும் கரடியனாறு நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் மோதியத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் முச்சக்கர வண்டி உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து!
Reviewed by Author
on
September 08, 2020
Rating:

No comments:
Post a Comment