சமய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் ஊடகங்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக விசேட கருத்தமர்வு.
சமய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் ஊடகங்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக விசேட கருத்தமர்வு.
(மன்னார் நிருபர்)
(02-09-2020)
சமய நல்லிணக்கத்தின் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்பும் வகையில் ஊடகங்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு எனும் கருப்பொருளில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில், அதன் இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளார் தலைமையில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தில் இன்று புதன் கிழமை மாலை 3 மணியளவில் விசேட கருத்தமர்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கருத்தமர்வில் வளவாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஆர்.நிக்ஸன் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
-இதன் போது சமய நல்லிணக்கத்தின் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்பும் வகையில் ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு எனும் கருப்பொருளில் கலந்துரையாடல் இடம் பெற்றதோடு, குழு செயற்பாடுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.....
No comments:
Post a Comment