ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
அபிதாபியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் மல்லுக்கட்டுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment