திருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அதி சொகுசு வாகனமானது முச்சக்கரவண்டியுடன் மோதுண்ட பின்னர் அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதுண்டுள்ளது.
இதன்போது, முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தின்போது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்துக்கான காரணம் இன்னமும் அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
September 27, 2020
Rating:

No comments:
Post a Comment