அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் -

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு எதிர்ப்பு போராட்ட பேரணியில் லண்டன் டிராஃபல்கர் சதுக்கத்தில் குறைந்தது 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் இறங்கியதை அடுத்து, இன்று ஊரடங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாருடன் மோதினர்.

போலீஸ் உட்பட எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.16 பேர் கைது செய்யப்பட்டனர்.தற்போது விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு விதிமுறைகளுக்கு மக்களிடையே மிகுந்த விரக்தி அடைந்துள்ள நிலையில் இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

 குறைந்தது இரண்டு ஆர்பாட்டக்கார்கள் இரத்தம் சித்துவதை காணக்கூடியதாக இருந்தது அதேவேளை குறைந்தது ஒரு காவலர் தலையில் கட்டு போட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.பிரித்தானியாவில் கொரோனா தொற்றுகள் வேகமாக தொடருவதால் அரசாங்கம் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 இதில் 6 பேருக்கு மேல் சமூக ஓன்று கூடலளுக்கு தடை, உணவகங்கள் மற்றும் மதுபான சாலைகள் திறந்து இருக்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள், மதுபான சாலைகளில் மற்றும் இருந்துகொண்டு உணவு அருந்தாத உணவகங்களில் கட்டாயம் ஊழியர்கள் முகக்கவசம் அணியவேண்டும் போன்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் -

















பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் - Reviewed by Author on September 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.