அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஹெலிகொப்டரில் வந்த உடல் உறுப்புக்கள்

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டு கல்லீரல்களையும் இரண்டு சிறுநீரகங்களையும் பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. 

 இலங்கை விமானப்படைக்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி Bell 412 ஹெலிகொப்டர் மூலம் குறித்த உடல் உறுப்புக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்ட பொது மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இந்த முக்கிய உறுப்புகளை கொண்டு செல்வது தொடர்பாக நேரத்தை சேமிப்பதன் மூலம், பொதுமக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நடவடிக்கை இலங்கை விமானப்படையின் வெற்றிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஹெலிகொப்டரில் வந்த உடல் உறுப்புக்கள் Reviewed by Author on September 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.