அண்மைய செய்திகள்

recent
-

18 தேயிலை தொழிற்சாலைகளுக்குப் பூட்டு

தேயிலைத்தூள் தயாரிப்பின்போது, கழிவுத் தேயிலை கலப்பு, இரசாயனச் சேர்க்கை உள்ளிட்ட பொருத்தமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டமை காரணமாக, 18 தேயிலைத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதாக, தேயிலைச் சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் அறிவித்துள்ளார்.

 மேலும், நாட்டிலுள்ள 705 தேயிலை உற்பத்திச் தொழிற்சாலைகளில், 405 தொழிற்சாலைகளில் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 தரம் வாய்ந்தத் தேயிலை உற்பத்தியில், தொழிற்சாலைகளின் பங்களிப்புத் தொடர்பாக ஆராய்ந்ததன் பலனாகவே, 18 தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்திப் பணிகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 சிறு மற்றும் மத்தியத்தர தொழிற்சாலை உரிமையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே, அவர் மேற்படி விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் தொழிற்சாலைகளுக்குள் இடம்பெறும் முறைகேடுகளைக் கண்டறியுமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கட்டளையிட்டுள்ளார். சர்வதேசச் சந்தையில் சிலோன் டீ என்ற நாமத்துக்கு பாதகம் ஏற்பட இனியொருபோதும் இடமளிக்கக் கூடாதென அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முறைகேடாக செயற்படும் நிறுவனங்களை உடனடியாக மூடுமாறும் கட்டளையிட்டுள்ளார்.



18 தேயிலை தொழிற்சாலைகளுக்குப் பூட்டு Reviewed by Author on September 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.