எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதியினை நிறுத்த திட்டம்!
நாவலப்பிட்டியில் நேற்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
"எதிர்காலத்தில் பால்மா இறக்குமதியை முற்றாக நிறுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எமது நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பசுக்களில் பால் கறக்கப்படுகின்றன. நம் நாட்டின் பால் உற்பத்தியில் நூற்றுக்கு 35% மட்டுமே செய்கிறோம். ஏனைய அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பால்மா இறக்குமதி செய்கிறோம். வெளிநாட்டிலிருந்து உட்கொள்ளும் தேசமாக இலங்கை மாறியுள்ளது.
நாங்கள் மில்கோவுடன் இணைந்து, கால்நடைகளுக்குத் தேவையான உதவிகள், உணவுகள், புல் மற்றும் கால் நடைக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் பணியாற்றுவோம்.
3 ஆண்டுகளுக்குள் பாலில் தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
இந்நாட்டிற்குப் பால் இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். நியூஸிலாந்தில் இருந்து அதிக பால்மா இறக்குமதி செய்யும் நாடு இலங்கைதான்" என அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதியினை நிறுத்த திட்டம்!
Reviewed by Author
on
September 28, 2020
Rating:

No comments:
Post a Comment