‘பிசாசு 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மிஷ்கின்!
அதன் பின்னரான பதினான்கு வருடங்களில் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட குறிப்பிட்ட படங்களை மட்டுமே அவர் இயக்கியுள்ளார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான சைக்கோ படத்திற்குப் பிறகு விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்படத்தை மிஷ்கின் கைவிட்டார்.
இந்நிலையில், அவரது பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பை அதிகாலை 12 மணிக்கு வெளியிட்டார்.
பிசாசு படத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்த நிலையில், பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியா, சைக்கோ படத்தின் வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதேநேரம் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
‘பிசாசு 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மிஷ்கின்!
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment