தந்தையை கொலை செய்தார் மகன்! தகவல் வழங்கிய பெண் கைது
கடந்த ஜூலை 20ம் திகதி பொல்கஹவெல, கஹவத்தஎல பகுதியில் வசித்த ஒருவரின் மரணம் தொடர்பாக, மகன் தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அந்த பெண் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்றின் உத்தரவுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் தொடர்பில் மற்றுமொரு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், குறித்த நபரின் மரணம் இயற்கையானது என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தொலைபேசி இலக்கத்தினை அடிப்படையாக கொண்டு தவறான தகவல் வழங்கிய பெண்ணை பொல்கஹவெல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தந்தையை கொலை செய்தார் மகன்! தகவல் வழங்கிய பெண் கைது
Reviewed by Author
on
October 01, 2020
Rating:

No comments:
Post a Comment