களஞ்சியப்படுத்திய மீன்களை விற்க ஏற்பாடு செய்க – மீனவர்கள் அரசிடம் கோரிக்கை
இவ்வாறு 3 இலட்சத்து 50 ஆயிரம் மீன்கள் மூடப்பட்டுள்ளமையால் தற்போதுள்ள மீன் இருப்புகளை நுகர்வோரிடம் ஒப்படைக்கச் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் விரைவான திட்டத்தை மேற் கொள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்து ரையாடலில் தீர்மானித்துள்ளனர்.
கொவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக காலி, பேருவளை மற்றும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் பேலியகொட மொத்த மீன் சந்தை மூடப்பட்டிருப்பதால் இலங்கை மீன்வளத் துறையில் பாதிப்பு ஏற்படாதிருக்க சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள 20 மீன்பிடித் துறைமுகங்களில் சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தக் கவனம் செலுத்தப்பட்டது.மீன்வளத் துறைமுகங்களுக்குப் பொருத்தமான சுகாதார வழிகாட்டுதல்களை மீன்வளத்துறை அமைச்சு மூலம் வெளியிடுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவுக்கு அமைச்சர் பவித்ரா அறிவித்துள்ளார்.
களஞ்சியப்படுத்திய மீன்களை விற்க ஏற்பாடு செய்க – மீனவர்கள் அரசிடம் கோரிக்கை
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment