அண்மைய செய்திகள்

recent
-

பங்களாதேஷில் பதுங்கியிருந்த இலங்கைத்தமிழர்கள் மூவர் கைது.

பங்களாதேஷில் பதுங்கியிருந்த இலங்கைத் தமிழர்கள் மூவர் அந்நாட்டு எல்லைப்பாதுகாப்பு படையினரால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டமூவரும் சீருப்நகர் காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை அதிகாலை, தாராலி வடக்கு பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றபோது குறித்த மூவரும் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். எம்.திருமாறன் (40), எஸ் .பிங்கலன் (36) மற்றும் மணிகண்டன் (25) ஆகிய மூன்று இலங்கைத்தமிழர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.

 அத்துடன் அவர்களிடமிருந்து சுமார் 2,43,819 ரூபா வெளிநாட்டு நாணயமும் கைப்பற்றப்பட்டுள்ளதுஇவர்கள் 10 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்குள் நுழைந்ததாகக் கூறியதாக, எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூவரும் தாங்கள் முதலில் இலங்கை நாட்டவர்கள் என்றும் 1990 ல் இடம்பெயர்ந்து தமிழகத்தில் வாழத் தொடங்கினர் என்றும் கூறினர். அவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்காக ஸ்டாலின் கிறிஸ்தோபர் என்ற முகவரை அணுகினர். இந்திய பாஸ்போர்ட்களைப் பெறுவது கடினம் என்று முகவர் அவர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் அந்த நாட்டிற்குப் பயணம் செய்தால் அங்கு பாஸ்போட்டை எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 பின்னர் மூவரும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். "பெனாபோலில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் செல்வதற்கு முன்பு அவர்கள் டாக்காவில் சில நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறினர். சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் அங்குள்ள முகவரால் ஏமாற்றப்படுவதை உணர்ந்து இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்தனர். அவர்களிடம் கிடைத்த பணம் பிரான்சில் பணிபுரியும் பிங்கலன் மற்றும் திருகுமரன் சகோதரர்களால் அனுப்பப்பட்டது என தெரியவருகிறது.

பங்களாதேஷில் பதுங்கியிருந்த இலங்கைத்தமிழர்கள் மூவர் கைது. Reviewed by Author on November 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.