மன்னாரில் 'புரெவி சூறாவளி' தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 18 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைப்பு-மாவட்ட அரசாங்க அதிபர்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை(3) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
நேற்று புதன் கிழமை இரவு தொடக்கம்,இன்று வியாழக்கிழமை அதிகாலை வரை ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 1778 குடும்பங்களைச் சேர்ந்த 6795 நபர்கள் பாதீப்படைந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
-இடம் பெயர்ந்த மக்கள் மாவட்டத்தில் உள்ள 18 இடைத்தங்கள் முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சமைத்த உணவினை அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடாக வழங்கி வருகின்றோம்.
-நேற்று புதன் கிழமை ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கடல் கொந்தழிப்பாக காணப்பட்டமையினால் கடல் நீர் சுமார் 40 மீற்றர் தூரம் கடற்கரையை தாண்டி வந்துள்ளது.
இதனால் தலைமன்னார்,பேசாலை,வங்காலைப்பாடு,சிறுத்தோப்பு, பள்ளிமுனை போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்களினுடைய மீன் பிடி உபகரணங்கள் குறிப்பாக படகுகள் சேதமாகி உள்ளது.
மீன் பிடி வலைகள் கடலினுள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.மீனவர்களின் கொட்டு வாடிகள் சேதமாகி உள்ளது.
இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு மீனவர்கள் முகம் கொடுத்துள்ளார்கள். குறித்த பாதிப்புக்கள் குறித்து அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு அறிவித்துள்ளோம்.
மேலும் மன்னார் தேக்கம் அனைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் சென்று கொண்டிருக்கின்றது.
இன்னும் ஒரு அடி அதிகமாகினால் குறித்த வீதி மூட வேண்டிய நிலை ஏற்படும்.
அவ்வாறு ஏற்பட்டால் பெரியமுறிப்பு,குஞ்சுக்குளம் போன்ற கிராம மக்கள் குறித்த வீதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ பணியாளர்கள் , கிராம அலுவலர்கள் ,முப்படையினர் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருக்கின்றோம்.
மேலதிகமாக அனர்த்தம் ஏற்பட்டால் முகம் கொடுக்க கூடிய நிலையில் தயாராக உள்ளோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் 'புரெவி சூறாவளி' தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 18 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைப்பு-மாவட்ட அரசாங்க அதிபர்
Reviewed by Author
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment