அண்மைய செய்திகள்

recent
-

ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்

கொவிட் 19 தொற்று நிலைமையின் மூன்றாம் பரவலுடன் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால், 2021 மே மாதத்திற்குரிய ஓய்வூதியம், விவசாய/மீனவர் ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இயலாது போனவர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை மாத்திரம் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் 2021 மே 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மு.ப 09.30 தொடக்கம் பி.ப 02.00 மணி வரை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அறிக்கை ஒன்றை வௌியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் அங்கீகாரத்துடன், இக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் தங்களுடைய ஓய்வூதிய அடையாள அட்டை, விவசாய/மீனவர் ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர்/பொதுசன கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி அஞ்சல் அலுவலகங்களுக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமங்களால் ஏதேனும் அலுவலகங்கள் திறக்கப்படாவிட்டால் 1950 துரித அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல் Reviewed by Author on May 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.