கினிகத்தேனையில் மண்சரிவு - தந்தை, மகன் காயம்!
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்று (13) மாலை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகலை பகுதியில் பாரிய கல் ஒன்றுடன் மண் திட்டு ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்ததன் காரணமாக பிரதான பாதை ஊடான போக்குவரத்து பல மணி நேரம் துண்டிக்கப்பட்டன.
இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து வீதியில் கொட்டிக் கிடந்த மண் மற்றும் கற்களை அகற்றியதன் காரணமாக ஒரு வழியாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.
இதேவேளை, மத்திய மலைநாட்டுப் பகுதியில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருவதனாலும், காலையிலும் மாலையிலும் மழை பெய்து வருவதனாலும் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகி வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
எனவே, மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும் சமீபமாக வாழ்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்கு வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளன.
கினிகத்தேனையில் மண்சரிவு - தந்தை, மகன் காயம்!
Reviewed by Author
on
May 14, 2021
Rating:

No comments:
Post a Comment