உயிரிழந்த முதியவருக்கு கொரோனா – இறுதிச் சடங்கில் பதற்றம்!
அவருக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறியப்பட்டுள்ளது. எனினும் பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.
முதியவர் அன்றைய தினமே 7ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து 9 ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை முற்பகல் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சடலம் நேற்று நண்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை வெளியாகிய பி.சி.ஆர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதனால் முதியவரின் உடலை சுகாதார முறைப்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது. இதனால் இறுதிச் சடங்கில் பதற்றமான நிலை காணப்படுகிறது.
உயிரிழந்த முதியவருக்கு கொரோனா – இறுதிச் சடங்கில் பதற்றம்!
Reviewed by Author
on
May 06, 2021
Rating:

No comments:
Post a Comment