அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கடந்த 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரிப்பு.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எதிர் வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை (8) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

 மன்னார் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 461 பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் அடிப்படையில் கொழும்பில் மேற்கொள்ள பரிசோதனைகளுக்கு அமைவாக முதல் கட்டமாக 7 கொரோனா தொற்றாளர்களும், நேற்று வெள்ளிக்கிழமை 15 தொற்றாளர்களுமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் தலைமன்னார் பியர், மன்னார் பள்ளிமுனை மற்றும் மன்னார் நகர பஸார் நிலைய பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் 370 தொற்றாளர்களும்,மாவட்டத்தில் இது வரை 387 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் நகரத்தில் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்றவர்களும், வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் உரிய முறையில் கொரோனா தடுப்பு நடை முறைகளையும், சுகாதார நடை முறைகளையும் கடை பிடிக்க வேண்டும். உரிய முறையில் கொரோனா தடுப்பு நடை முறைகளை பின் பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள்,நிறுவனங்கள் மீது எதிர் வரும் திங்கட்கிழமை முதல் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக உணவு கையாலும் நிலையங்கள்,உணவு உட்கொள்ளும் இடங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையை தவிர அதிக எண்ணிக்கையில் மக்களை உணவகங்கள்,கடைகளினுள் வைத்திருக்கின்றமை பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

 எனவே மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.மேலும் நேற்று வெள்ளிக் கிழமை(7) 150 பீ.சி.ஆர். பரிசோதனைக்காக முல்லேரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு இரணை தீவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள பீ.சி.ஆர்.பரிசோதனைக்கான அறிக்கையும் எதிர் பார்க்கப்பட்டுள்ளது. எனவே எதிர் வரும் இரண்டு வராங்களுக்கு மக்கள் கடுமையான சுகாதார நடை முறைகளை கடை பிடித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்


.
மன்னாரில் கடந்த 8 நாட்களில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரிப்பு. Reviewed by Author on May 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.