சாதனை படைத்த மன்னார் மடுக்கரை மாணவர்களுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி
ஜெயரத்தினம் ஜெயப்பிரதா மாவட்ட மட்டத்தில் கலைப்பிரிவல்3A சித்திகளை பெற்று 1ம் நிலையையும்,இராமநாதன் புஸ்பலீனா கலைப்பிரிவில் 2A,B சித்திகளை பெற்று 4 ம் நிலையையும் பெற்றுள்ளனர்.
மிகவும் பின்தங்கிய கிராம மாணவர்கள் வறுமை கல்விக்கு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.
இம் மாணவிகள் நானாட்டானில் உள்ள டிலாசால் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவிகளாவார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் இம் மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பல்கலைக்கழக படிப்புக்கு தேவையான மேலதிக தேவைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் பல்கலைக்கழக பட்டப்படிப்பு நிறைவடைந்ததும் எதிர்காலத்தில் எமது மன்னார் மாவட்டத்தில் தங்களது சிறப்பான பணியை தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சாதனை படைத்த மன்னார் மடுக்கரை மாணவர்களுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி
Reviewed by Author
on
May 13, 2021
Rating:

No comments:
Post a Comment