மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கடலாமைகள்-கண்டு கொள்ளாத வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்.
அவற்றில் ஒரு கடலாமை உயிரிழந்துள்ளதோடு மற்றைய கடலாமை உயிருடன் காணப்படுகின்றது.கடற்படையினர் குறித்த கடலாமைகள் கரை ஒதுங்கியமை தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
-எனினும் நீண்ட நேரமாகியும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வராத நிலை காணப்பட்டதோடு,உயிருக்கு போராடும் கடும் காயங்களுடன் கரை ஒதுங்கிய மற்றைய கடலாமையை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிய வருகின்றது.
இச் செய்தி எழுதும் வரை குறித்த பகுதிக்கு அதிகாரிகள் யாரும் செல்லவில்லை.
அண்மையில் வங்காலை மற்றும் சிலாபத்துறை கடற்கரை பகுதிகளிலும் கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கடலாமைகள்-கண்டு கொள்ளாத வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்.
Reviewed by Author
on
June 17, 2021
Rating:
Reviewed by Author
on
June 17, 2021
Rating:






No comments:
Post a Comment