சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து 4700 முறைப்பாடுகள்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
பல முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும், பெறப்பட்ட முறைப்பாடு களில், எங்கள் அதிகாரத்தின் அதிகார வரம்புக்குப் பொருந்தாத முறைப்பாடுகளை சம்பந்தப் பட்ட பிரிவுகளுக்கு அனுப்பியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிகமானவை சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் சித்திரவதைகள், இணையத் துன்புறுத்தல் தொடர்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிறுவர்களுக்கு இணையவழி ஊடாக துன்புறுத்தல் மேற்கொண்ட முறைப்பாடுகள் சற்று அதிகரித்திருப்பதை அறியக் கூடியதாகவுள்ளது என்றும் கடந்த ஆண்டு மாத்திரம் இணையவழி ஊடான துன்புறுத்தல் குறித்த 152 முறைப்பாடுகள் கிடைத்துள்ள தாகவும் விதானபதிரண தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மாத்திரம் இணையவழி ஊடாக துன்புறுத்தல் தொடர்பாக 74 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இணையவழி ஊடாக துன்புறுத்தல் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு 51 முறைப்பாடுகளும் 2018 ஆம் ஆண்டு 48 முறைப்பாடுகளும் 2019 ஆம் ஆண்டு 52 முறைப்பாடு களும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து 4700 முறைப்பாடுகள்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
Reviewed by Author
on
July 29, 2021
Rating:

No comments:
Post a Comment