இலங்கை வங்கியின் பாதுகாப்பில் விலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த மூன்று இரத்தினக்கற்கள் !
இதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் ஆலோசனைக்கு அமைய அதிகார சபையின் பணிகள் நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள அமைச்சின் கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிகள், மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை அதிகார சபையின் வசமிருந்த மூன்று விலைமதிக்க முடியாத இரத்தினக்கற்கள் இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டியில் நேற்று வைக்கப்பட்டது.
பொலிஸ் விசேட அதிரடி படையின் உயர் பாதுகாப்பிற்கு மத்தியில் இந்த இரத்தினக்கற்கள் இலங்கை வங்கிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை வங்கியின் பாதுகாப்பில் விலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த மூன்று இரத்தினக்கற்கள் !
Reviewed by Author
on
July 20, 2021
Rating:

No comments:
Post a Comment